தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான்
>> Wednesday, July 22, 2009
இளையான்குடி வரலாற்றில், திருநெல்வேலி மாவட்டம், தென்மலை என்ற ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் "தென்மலைக்கான் வகையறா" என்று அழைக்கப்படுவதாக நாம் அறிகிறோம்.
நமதூரில் தென்மலைக்கான் என்றதுமே நினைவுக்கு வருபவர்கள் மர்ஹூம். அல்ஹாஜ் T.K.H. அவர்களே! ஏனெனில் அவர்கள் செய்த நற் செயல்களின் பலனாக..
ஹாஜி காதர் சாஹிப் அவர்களுக்கும், ஜனாபா பொன்னம்மாள் பீவீ அவர்களுக்கும் 1909 ம் ஆண்டு மே மாதம் இளைய மகனாகப்பிறந்தார்கள்.
ஹாஜி.அப்துல் மஹ்மூத் அவர்கள், ஹாஜியானி ஜெமிலா பீவீ அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
இவருடைய துனைவியர் பெயர் ஹாஜியானி மரியம் பீவீ ஆவார்கள்.
இத் தம்பதிகளுக்கு 3 பெண் மக்களும் (ஜனாபா. ஷெரிஃபா பீவீ, ஜனபா ஃபைரோஸா பீவீ, ஜனாபா சமீம் ஷிரா) 3 ஆண் மக்களும்(டாக்டர்.முஹமது ஃபிர்தவ்ஸ், ஜனாப்.முஹமது ஃபாரூக், ஜனாப் முஹமது ஃபரிஸ்டா) உள்ளார்கள்
T.K.H. அவர்களின் 8 வது வயதிலேயே தன்னுடைய தாயாரை இழந்து, சகோதரி ஜெமிலா பீவீயாலும். தகப்பனார் காதர் சாஹிப் அவர்களாலும் பிரியமிகு பிள்ளையாக வளர்ந்து வரும் வேலையில், தன்னுடைய 10வது வயதில், தகப்பனாருடன் பினாங்(மலேயா) சென்று, கல்வி கற்று, அங்குள்ள ஸ்கூல் உயர் படிப்பான 'கேம்ப்ரிட்ஜ்' O 'லெவெல் படிப்பை 1925 ல் நிறைவு செய்தார்கள். தன்னுடைய 16 வது வயதில், தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் முதல் முயற்சியாக, பினாங்கிலேயே, ஹாஜி K.M..சுல்த்தான் அலாவுதீன் அன்ட் சன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,கப்பலில் சரக்கு ஏற்றி, இறக்கும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து, படிப்படியாக, முன்னேற்றப்பாதையில், சிறிதும் சறுக்காமல், நல்லதொரு வளர்ச்சியினை அடைகின்ற வேளையில்...
இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய இரானுவம், மலேயாவை கைப்பற்றியதனால், ரானுவம் எல்லா வியாபாரத்தலங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததின் காரணமாக, எல்லா வியாபாரிகளும் ஆதிக்க சக்திக்கு பயந்து, காடுகளில் ஒளிந்து .மறைவு வாழ்க்கையில் ஈடுபட்டது போல், T.K.H அவர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
போருக்குப்பின், பினாங்கில் T.K.H. அவர்கள் துணிந்து தன்னுடைய வியாபாரகளத்தில், உணவுப்பொருட்கள், மருந்து வகைகள் வியாபாரத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..
பின் வரும் நாட்களில். தன்னுடைய வியாபாரத்தை, மலேயாவிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து கராச்சியிலும், சிட்டஹாங்கிலும், தன்னுடைய வியாபாரத்தை நிலை நிறுத்தியும், சீறும் சிறப்புடனும், 1971 வரை வெற்றிகரமாக நடந்து வரும் வேளையில், இந்திய பாகிஸ்தான் போரினால்.வியாபாரம் நடத்த முடியாமல், பாகிஸ்தானில் வியாபாரத்தை மூடி விட்டு சென்னை திரும்பினார்.
இவருடைய வாழ்க்கையில் 2 பெரிய போர்கள் விளையாடி இருக்கின்றன.. எல்லாம் நன்மைக்கே.. அல்லாவின் கருணையினால்..
சென்னையில் 1973ம் ஆண்டு, புதிய மகாபலிபுரம் ரோட்டில் (VGP அருகில்) ஹம்மா(HAMMA) ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஆரம்பித்து, கட்டுமான வேலைக்குண்டான ஸ்டீல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தும், இதன் மூலம் பல ஆட்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும், வியாபாரமும், பொது நற்காரியங்களும் செய்து வரும் வேளையில்....
1999ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி, தன்னுடைய 90 வது வயதில் வபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)
ஒரு மனிதன், உலகத்தின் எல்லா மூலை, முடுக்குகளில் சுற்றி வந்து வியாபாரம் செய்திருந்தாலும், தான் பிறந்த மண்னையும், தன்னை உருவாக்கிய தந்தையையும் எவ்வளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு சான்றாக, T.K.H. அவர்களின் எண்ணமும், ஆசையுமாகவும், இதயத்தின் உறுதியும் தான், அவர் வபாத் ஆனவுடன், தான் பிறந்த மண்ணிலேயும், தன் 10 வயதில், எப்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வழிகாட்டிய தன் தகப்பனாருடன் சென்றாரோ, அதுபோல் அவரது 90வது வயதிலும், தகப்பனாருடைய கபர்ஸ்தான் பக்கத்திலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்ற "ஹாஜத்தை" அவருடைய பிள்ளைகள் நிறைவேற்றிணார்கள்....
இவருடய நற்காரியங்களில் சிலவற்றின் தொகுப்பு:
1) இளையான்குடியில் "THENMALAIKHAN EDUCATIONAL TRUST' உருவாக்கியது.
2) இளையான்குடியில் பெண்களுக்காக ஒரு தனி உயர் நிலைப்பள்ளி உருவாக்கியதில் ஒருவரும், இப்பள்ளிக்காக, தன்னுடைய தாயார் நினைவாக "பொன்னம்மாள் காதர் சாஹிப் பெண்கள் உயர் நிலைப்பள்ளி'" என்ற பெயரில் ஒரு கட்டிடத்தைக்கட்டி கொடுத்தவரும் இவரே!
3) சென்னையில் 'UNITED ECONOMIC FORUM' நிறுவன உறுப்பினராக இருந்துள்ளார்கள்.
4) இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில், "இஸ்லாமிய கலை களஞ்சியம்" என்ற கட்டிட வளாகத்தை கட்டி அர்ப்பனித்துள்ளார்கள்.
5)இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் "காதிரியா மஸ்ஜித்" உருவாக்கிய பெருமையும் இவரைச்சாரும்.
6)இளையான்குடி, INPT ஜமாத்துக்காக சிங்காரத்தோப்பில் ஜூம்மா பள்ளி நிறுவியவரும் இவரே.
7) சிவகெங்கை இளையான்குடி ரோட்டில், சாத்தரசன்கோட்டை என்ற ஊரில் "காதிரியா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.
8)சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவிலில்,"முஹமதிய மஸ்ஜித்" உருவாக்கி வக்ப் செய்துள்ளார்கள்
9) பரமக்குடியில், பாரதி நகரில் "ஜும்மா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.
இவரிடம், நாங்கள் அதிசயித்த விசயம் இவருடைய எளிமை. பந்தா, பகட்டு என்று ஏதும் அறியாதவர். INPT பள்ளிக்கு அன்றையகால கட்டத்தில், நடந்த சில முக்கியமான நிகழ்வுகளுக்கு, இவருடைய பங்கு போற்றதக்கதாகும்.
இன்று இவர்கள் நம்முடன் இல்லை, ஆனால் இவர் உருவாக்கி விட்ட கல்வி, மற்றும் இஸ்லாமிய ஸ்தாபனங்கள், பள்ளிகள் இவருடைய பெயரையும், புகழையும் அழியா வண்ணம், எப்படி "பூ வாடி விட்டாலும் அதனுடைய வாசனையை முகர்ந்தவர்கள் மறக்க மாட்டார்களோ" அதைப்போல், இளையான்குடி மக்களும் TKH எனும் மலரை மறக்க மாட்டார்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன்....
(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் TKH அவர்களின் இளையமகனார் ஜனாப். முஹமது ஃபரிஸ்டா அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி)
ஜனபா யாஸ்மின் அவர்களின் "கமென்ட்ஸ்" படி இந்த வாக்கியம் நீக்கப்படுகிறது. வாசகருக்கு நன்றி
WEBADMIN HOME




