இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகுக...

>> Monday, January 9, 2012


அல்ஹாஜ்
 V.M. பீர்முஹமது அவர்கள் தான் 
"
கல்லூரி தந்தை" 
என்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும்பின்னூட்டங்களும் பின் வருமாறு:

படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி  பெரிதாகா விட்டால்  மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.
http://www.inp.ilayangudi.org/

Wikipedia/Tamil

nidur.info

Wikimapia

Sivagangaionline

Malaya Burma Star


Wapedia


I.T.I Velli vizha Malar/www.ilayangudi.org



www.ilayangudikural.com/ comments


www.ilayangudikural.com /A.E.Naina Mohamed Ambalam



www.ilayangudi.org/ comments/ALAM

இத‌ன் வெளியீட்டாளர்களுக்கும்,
இணையதள‌த்தில்
பின்னூட்டம் அளித்தவர்களுக்கும்
எங்களது
இதய பூர்வமான நன்றிகள்
உரித்தாகுக..
ஆமீன்



Read more...

அன்று கல்லூரிக்கு கிள்ளிப்போட்டாரா! அள்ளிப்போட்டாரா!

மறைக்கப்பட்டு வரும் உண்மை,

இன்னும் இளையான்குடி பொது மக்கள் அறிந்தும் அறியாமல் வெளியில் 
காட்டிக்கொள்ளாமல்  இருப்பவர்களுக்கும், மறைத்து வைத்தது மறைந்தே இருக்கட்டும் என்றும், இன்று கல்லூரியில் பதவிக்கு வந்து விட்டால் ஒரு வழியாய் அவரவர் கணவு நிறைவேறிவிடும் என்ற மமதையில் இந்த உண்மையை மறைக்கப்பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கும், இப்படி கல்லூரிக்கு கொடுத்ததாக சொல்கிறார்களே!  இது உண்மையா? என்ற சந்தேக கண்கொண்டு பார்ப்பவர்களுக்கும், குறிப்பாக இளை. இளைய சமுதாயத்தினருக்கும் 
 சமர்ப்பனம்..


             Page 1                                                                                                             Page 2
Click to Enlarge

     Page 3                                     Page 4                                                Page 5

EC For Donated Land

கல்லூரிக்கு அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் அளித்த நில‌ தான‌ ப‌த்திர நகலின் சாராம்ச‌ம்:


ரூ.3000.00 மதிப்புள்ள தான செட்டில் மெண்டு பத்திரம்

1970ம் வருஷம் ஏப்ரல் மீஉ 20உ இருபது தேதிக்கு சாதாரன வருசம் சித்திரை மீஉ 12 உ.
இளையாங்குடி கல்லூரிகழகத்திற்காக காலேஜ் சொசைட்டிக்காக சிவகங்கையிலிருக்கும் கிழக்கு ராமநாதபுரம் மாவட்ட பதிவகத்தில் S 64/1968 ம் எண்ணாக பதிவு செய்திருக்கிறபடி மேற்படி கழகத்தலைவரும் பிரதிநிதியுமான இளையாங்குடி டவுன் ஹவுத் அம்பலம் தெரு 9ம் என் உள்ள இடத்தில் வசிக்கும் ஜனாப் வி.காதர் அம்பலம் அவர்கள் குமாரர் வியாபாரம் விவசாயம் ஜனாப் V.K. இபுறாஹிம் அலி அம்பலம் அவர்களுக்கும் இனிமேல் மேற்படி ஸ்தானத்தை வகிப்பவர்களுக்கும் இளையாங்குடி டவுன் ஊரணிக்கரைத் தெரு 27 நிர் வீட்டில் வசிக்கும் வாஞ்சூர் முஹமது அவர்கள் குமாரர்  விவசாயம் வியாபாரம் ஹாஜி V.M.பீர்முஹமது அவர்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டுப் பத்திரம்இளையான்குடி வட்டாரத்தில் மக்கள் கல்வி வளர்ச்சிக்குத்தேவையான கல்லூரி ஆரம்பிக்க வேனுமென்றும் நீடித்த காலமாய் எனக்கு இருந்த எண்ணத்தின்படி மேலேகண்ட கல்லூரிக்கு நிலம் தேவைப்படுவதாகத்தெரிந்து,மேற்படி பொதுக்காரியத்திற்காக தர்ம சிந்தனையாய் நான் 19.04.1970ல் ஆ.க.நாஹூர் கனி ராவுத்தருக்காக மேற்படியாரின் பவர் ஏஜண்டாகிய இளையாங்குடி ந.சி.ரா.அபுத்தாஹிர் அவர்களிடமிருந்து ரூ 2500.க்கு நான் கிரையபத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்து வாங்கிய மூலம் எனக்கு பாத்தியமான அனுபவமான தற்கால மதிப்பின்படி ரூ 3000 ரூபாய் மூவாயிரம் பெறுமானமுள்ள கீழ்கண்ட புஞ்சை நிலத்தை மேற்படி கல்லூரிக்கழகக் காரியத்துக்காக இந்த தான செட்டில்மெண்டு மூலமாக நான் பாத்தியப்படுத்தி வைத்து சொத்தின் சக‌ல விதப் பொஷிஸன் வகையராவையும் மேற்படி கல்லூரிக்கழகத் தலைவர் முறையில் தங்களிடம் நான் ஒப்புவித்துவிட்டதால் தாங்களும் தங்கள் ஸ்தானங்களைப்பின் வகிப்பவர்களும் சர்வ சுதந்திரப் பாத்தியமாய் என்றென்றைக்கும் இஷ்டப்படி ஆண்டனுபோகம் செய்து கொள்ள வேண்டியது.
மேற்படி சொத்துக்குண்டான பட்டாவை மேற்படி கல்லூரியின் பெயரில் மாற்றுவதற்க்கு மேற்படி நமூனாவும் கொடுத்திருக்கிறது மேற்கண்ட என் பெயரிலுள்ள ரிஜிஸ்தர் கிரையப்பத்திரமும் இத்துடன் இருக்கத்தக்கது.

சொத்து விபரம்

கிழக்கு ராமநாதபுரம் ரிடி இளையாங்குடி சப்டி இளையாங்குடி துனைத்தாலுகா, இளையாங்குடிடவுன் பஞ்சாயத்து இளையாங்குடி கிராமம் தெற்கு வட்டத்தில்
இளையாங்குடி பரமக்குடி  ரஸ்த்தாவுக்கும் கிழக்கு, சர்வே 212/2 நிர் கு.சி.ஜெயினுலாபுதீன் அம்பலமிடமிருந்து கல்லூரிக்கு ஏற்கனவே கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் தெற்கு, சர்வே 211/2 நிர் இ.அப்துல் ரஜாக்கு வகையராவிடமிருந்து மேற்படி கல்லூரிக்கு கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் மேற்கு,சர்வே 213 நிர் பொ.அ.ந.காதர் மீறா புஞ்சைக்கும் வடக்கு. இதற்குள்ளான 342 நிர் பட்டாவில் கண்ட‌சர்வே 212/3 நிர் புஞ்சைத்தாக்கு 1க்கு ஏ.2 செண்டு 78 ஏக்கர் இரண்டு செண்ட் எழுபத்திஎட்டு இதற்கு  1.12.51.ஆர் மேற்படி நிலம் தற்கால மதிப்பு ரூ 3000 பெரும்.
                                                                                           Sd. V.M.PEER MOHAMED

சாஷிகள்:

1)  A.M.Syed Ibrahim S/o  A.E. Mohamed Ali. Ilayangudi..

2) முத்துவேல் பிள்ளை.ஹெட்மேன்.S/o. உரும‌ன‌ப்பிள்ளை அரியாண்டிபுர‌ம்.

இது எழுதிய‌து  இளையாங்குடி முத்து ராக்கு பிள்ளை ம‌க‌ன் தெ.மு.ந‌ட‌ராஜ‌ன் பிள்ளை



Read more...

எட்டாம் வெளிச்சம்-திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்

>> Friday, January 22, 2010

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.

இளையான்குடியைப் பொருத்தவரை மேலப்பள்ளி ஜமாத்,நெசவுப்பட்டடை ஜமாத், சாலை, புதூர் ஜமாத் ஆகிய‌ ஜமாத்துக்களுக்கு சமமாக "செட்டியார்" சமூகமும், ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நேரம் அது.

இப்பொழுது நிறைய செட்டியார் சமூகத்தைச்சார்ந்தவர்கள் வியாபார நிமித்தமாய், உறவின் காரணமாயும் ஊரை விட்டு மதுரை, கோயம்புத்தூர் என்று பல ஊர்களுக்கு குடி பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஊரில் முக்கிய நிகழ்வுகளுக்காகவும், கோவில் விஷேசங்களுக்கும், உறவினர்கள் விஷேசத்திற்க்கும் வந்து, போய், இளையான்குடியுடன் கலந்து, ஒற்றுமை மாறாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது மிக சந்தோசமான செய்தி அல்லவா?

இளையான்குடியில் பெரும்பாலும் செட்டியார் சமூகம் 'ஆயிர வைசிய' பிரிவைச்சார்ந்தவர்கள் என்று சரித்திரம் எடுத்துரைக்கிறது.

இப்படி செட்டியார் சமூகத்தில் ஊருக்கென்று பொது ஸ்தாபனங்களுக்கு தானமாக இடம், பொருள், உழைப்பு என்று வழங்கியோர் பலருண்டு. இதில் எள்ளளவும் மாற்று கருத்து கிடையாது. இளை.வெளிச்சத்தில் முன்பே பதிப்பான‌ 'இரண்டாம் வெளிச்சத்தில்' ஆரம்ப பள்ளி ஆரம்பித்த திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களைப் பார்த்தோம்.

இந்த செட்டியார் சமூகத்தில் இளையான்குடியில் பிறந்து, ஊருக்காக பல வகைகளில் உழைத்தவரும், நல்ல பண்பாளரும், அமைதியும், அடக்கமும் உடையவரும் எல்லோருடனும் பழகுவதற்க்கு எளிமையானவருமான "திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார்" அவர்களை இங்கு "வெளிச்சம்" ஆக வெளியிடுவதில் திருப்தியடைகிறோம்.

இவரைப்பற்றி சொல்லும்போது, முதன்மையாக சொல்ல வேண்டுமெனில் இவர் சிறந்த பக்திமான்.. கடவுள் மீது அதிக பற்றுள்ளவர், இதற்கு எடுத்துக்காட்டாக, இளையான்குடியின் புரதான சின்னமாக விள‌ங்கும் பெருமாள் கோவிலின் ராஜ கோபுரத்தை 1942ல் கட்டி, கோவிலுக்கு சிறப்புச்செய்தார்.

இளையான்குடியில் முதன் முதலாக 1960ல் காஃபித்தூள் அரைக்கும் மிஷினை நிறுவி, "விக்டர் காஃபி ஒர்க்ஸ்" என்ற நிறுவனத்தை நிறுவினார். இதனால் சுற்று வட்டாரம் யாவும் 'ஃப்ரஷ்ஷாக' காஃபித்தூள் கிடைத்து, மக்கள் "பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு" என்று குதூகலிக்க வைத்தவர்.

இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத்தில் 3, 4, 5வது கமிட்டியில் உறுப்பினராக இருந்து, நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கியுள்ளார்..

இளையான்குடி கல்லூரிக்கழகம் 1968ல் ஆரம்பிக்கும்பொழுது, செயற்குழு கமிட்டியில் மெம்பராக இருந்து "கல்லூரிக்காக 50 ஏக்கர் நிலம் தேவை என்றும், இதைபெற மக்களிடம் யூனிட் முறையில் பணம் பெறுவது என்றும், ஒரு யூனிட்டின் விலை ரூபாய் 300/= என்றும் " ஒரு அரிய திட்டத்தைக்கொண்டு வந்தவர் இவரே.. இவரும் தன் பங்காக 2 யூனிட்(ரூ 600/=) வாங்க நிதி அளித்துள்ளார்கள்..

இவர்கள் வாழும் வரை ஊருக்காக பல தான தர்மங்கள் வழங்கியதற்கான ஆதாரமாக கீழே இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கமும், இளையான்குடி கல்லூரிக்கழகமும், இவருடைய ஷஷ்டியப்த பூர்த்தியின் போது வெளியாக்கிய பாராட்டு மடல்.
இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கம்‍ - பாராட்டு மடல்.

CLICK TO ENLARGE


இளையான்குடி கல்லூரிக்கழகம் - பாராட்டு மடல்



இவருடைய குடும்பம் பற்றி:


இவர்களுடைய துனைவியார் திருமதி மீனாம்பாள் அம்மையார் அவர்கள்

இத்தம்பதியினருக்கு 2 ஆண் மக்கள், 3 பெண் பிள்ளைகள், ஆண் மக்களில் மூத்தவர் திரு சந்திரன், இளையவர் திரு நடராஜன்.

பெண் மக்கள் திருமதி புஷ்பம், திருமதி சரோஜா , திருமதி தேவி ஆகியோர் ஆவார்கள்..
CLICK ON THE PHOTO TO ENLARGE.

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.
"வாழ்ந்தால் உங்களைப்போல் நல் மனிதராக‌ வாழ வேண்டும்"

தகவல்கள் வழங்கியது திரு S.P சந்திரன
********

நிர்வாகம்
Home

Read more...

ஏழாம் வெளிச்சம்-அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்:

>> Friday, December 18, 2009


"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" - அறிஞர் அண்ணாதுரை..

இளையான்குடியில் பிறந்து, சட்டத்தின் இருட்டறையில் புகுந்து, விளக்கு(வெளிச்சம்) ஏந்தி
சட்டத்திற்கும், இளையான்குடிக்கும் பெருமை சேர்த்தவர் எவரோ? அவரே
அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்..

இளையான்குடியில், ஆங்கிலேயர் காலத்திலேயே கிராம அதிகாரியாக (ஹெட் மேன்) நியமனம் பெற்று, வளையாத 'ஹெட்மன்' என்று பெயரெடுத்த ஜனாப் கு.சிக்கந்தர் பாட்சா அம்பலம், ஜனாபா சபுர்ஹான் பீவீ ,தம்பதிகளின் மூன்று புதல்வர்களில் 'இளையவராக'
15/07/1930ல் பிறந்தார்.

இளம் வயதில், எல்லோரும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த, ரஹ்மானியா உயர் ஆரம்பப்பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி முடித்து, பின் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி போர்ட் உயர்நிலைப்பள்ளியில் பயின்று விட்டு, ம‌துரை, அமெரிக்கன் கல்லூரியில் B.A. பட்டப்படிப்பை கற்று, பட்டதாரியாகி, சட்டம் பயில வேண்டி, மெட்றாஸ் சட்டக்கல்லூரியில் B.L. பட்டம் வாங்கி 1956ல் வழக்கறிஞர் ஆகிறார்.

மதுரையில் புகழ் பெற்ற, மூத்த வழக்கறிஞர் திரு M.S..கிருஷ்னஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் Apperentice ஆக சேர்ந்து பணியாற்றிவிட்டு, பின் 19/12/57 முதல் 1961 வரை மதுரையில் வக்கீலாக பயிற்ச்சியில் இருந்தார்.

1961 லேயே ,சென்னை வந்து மதிப்பிற்குரிய ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்களிடம் ஜூனியராக தன் திறமையைகாட்டி வந்துள்ளார்கள்.பின் மதிப்பிற்குரிய மேதகு ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்கள் நீதியரசராக வீற்றிருந்து 'நீதி' யை நிலை நிறுத்தி வந்துள்ளார்கள் .இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்தார்கள்

அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்,உயர் நீதி மன்ற‌த்திலும், சார்பு நிலை நீதி மன்றத்திலும். ட்ரிப்யூனலிலும், வழக்காடி நல்லதொரு மூத்த வழக்கறிஞர் என்ற பெயரை நிலை நாட்டினார்கள்..

இவருடைய திறமையின் பயனாக, 1989ல், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி அரசாங்கத்தின், அரசு சார்பு Pleader ஆகவும், பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆகவும் சென்னை உயர் நீதி மன்றத்தில், 4 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார்கள்

பாண்டிச்சேரியின், Anglo French Textiles Ltd கம்பெனியின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார்.

02/04/2002ல். பாண்டிச்சேரி அரசின் மனித உரிமைக்கமிட்டியின் மெம்பராக‌, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் நியமனம் செய்கிறார்கள். பாண்டிச்சேரி மனித உரிமை கமிட்டியில் .மேதகு நீதியரசர் P. தங்கமனி அவர்கள் (Madras High Court) சேர்மனாகவும், ஜனாப் K.S.அஹமது அவர்களும் ,Sister சேவியர் மேரி அவர்களும் அங்கம் வகித்தனர் .

இவருடைய குடும்பத்தை பற்றி: இவர்களது துனைவியார் பெயர் ஜனாபா. சபியாள் பேகம், இத் தம்பதிகளுக்கு, இரண்டு பெண் மக்களும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர்

இவரது மூத்த மகனார், Dr. உஸ்மான் அலி அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார்.. தற்சமயம் சென்னையை அடுத்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் Senior Civil Surgeon ஆகப்பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இளைய மகனார், ஜனாப் அப்துல் ஜலீல் அவர்கள், அரப் அமீரகத்தில் வேலை செய்துவிட்டு ,சென்னை வந்து Textile தொழிலில் ஈடுபட்டுள்ளார்
.

Advocate K.S.Ahamed.B.A.B.L




இவரைபற்றி பொதுவாக:

அம்பலமா? என்பதை நம்பலாமா? என்பதற்கேற்ப, யாரையும் இவர் சீண்டியதும் ,தீண்டியதும் இல்லை..

சினமும், சீறுவதும் நீதி மன்றத்தில் வழக்காடும் போதுதான்..

மனித நேயம், பிறர் கேட்காமல் செய்யும் உதவிகள், பல ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச்செய்தல்..

இவரிடம் "Case" கட்டுகள் அதிகமாக இருந்தாலும், "Cash" கட்டுகள் அதிகம் பெற்றதில்லை..

எந்தவொரு வழக்கும், தன் மனதுக்கு நியாயமாக பட்டால் மட்டுமே, வாதாடுவார்கள்..

ALIM Engineering College க்கு ஸ்தாபக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்கள்..

இவரிடம் ஜூனியராக பணியாற்றியவர்கள், இன்று உயர் நீதி மன்றத்தில் நல்ல புகழோடு வாதிடுகிறார்கள்..

இவர்கள் நிச்சயமாக "நீதிபதி" ஆகியிருக்க வேண்டும்..ஆனால்?!

2007 ம் வருடம் நவம்பர் மாதம் 21ந்தேதி சென்னையில் வபாத் ஆனார்கள்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..


தகவல்கள் வழங்கியவர் K.S.A. அப்துல் ஜலீல் அவர்கள்..

நிர்வாகம்

Home

Read more...

தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான்

>> Wednesday, July 22, 2009

இளையான்குடி வரலாற்றில், திருநெல்வேலி மாவட்டம், தென்மலை என்ற ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் "தென்மலைக்கான் வகையறா" என்று அழைக்கப்படுவதாக நாம் அறிகிறோம்.

நமதூரில் தென்மலைக்கான் என்றதுமே நினைவுக்கு வருபவர்கள் மர்ஹூம். அல்ஹாஜ் T.K.H. அவர்களே! ஏனெனில் அவர்கள் செய்த நற் செயல்களின் பலனாக..

ஹாஜி காதர் சாஹிப் அவர்களுக்கும், ஜனாபா பொன்னம்மாள் பீவீ அவர்களுக்கும் 1909 ம் ஆண்டு மே மாதம் இளைய மகனாகப்பிறந்தார்கள்.

ஹாஜி.அப்துல் மஹ்மூத் அவர்கள், ஹாஜியானி ஜெமிலா பீவீ அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவருடைய துனைவியர் பெயர் ஹாஜியானி மரியம் பீவீ ஆவார்கள்.

இத் தம்பதிகளுக்கு 3 பெண் மக்களும் (ஜனாபா. ஷெரிஃபா பீவீ, ஜனபா ஃபைரோஸா பீவீ, ஜனாபா சமீம் ஷிரா) 3 ஆண் மக்களும்(டாக்டர்.முஹமது ஃபிர்தவ்ஸ், ஜனாப்.முஹமது ஃபாரூக், ஜனாப் முஹமது ஃபரிஸ்டா) உள்ளார்கள்

T.K.H. அவர்களின் 8 வது வயதிலேயே தன்னுடைய தாயாரை இழந்து, சகோதரி ஜெமிலா பீவீயாலும். தகப்பனார் காதர் சாஹிப் அவர்களாலும் பிரியமிகு பிள்ளையாக வளர்ந்து வரும் வேலையில், தன்னுடைய 10வது வயதில், தகப்பனாருடன் பினாங்(மலேயா) சென்று, கல்வி கற்று, அங்குள்ள ஸ்கூல் உயர் படிப்பான 'கேம்ப்ரிட்ஜ்' O 'லெவெல் படிப்பை 1925 ல் நிறைவு செய்தார்கள். தன்னுடைய 16 வது வயதில், தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் முதல் முயற்சியாக, பினாங்கிலேயே, ஹாஜி K.M..சுல்த்தான் அலாவுதீன் அன்ட் சன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,கப்பலில் சரக்கு ஏற்றி, இறக்கும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து, படிப்ப‌டியாக, முன்னேற்றப்பாதையில், சிறிதும் சறுக்காமல், நல்லதொரு வளர்ச்சியினை அடைகின்ற வேளையில்...

இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய இரானுவம், மலேயாவை கைப்பற்றியதனால், ரானுவம் எல்லா வியாபாரத்தலங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததின் காரணமாக, எல்லா வியாபாரிகளும் ஆதிக்க சக்திக்கு பயந்து, காடுகளில் ஒளிந்து .மறைவு வாழ்க்கையில் ஈடுபட்டது போல், T.K.H அவர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

போருக்குப்பின், பினாங்கில் T.K.H. அவர்கள் துணிந்து தன்னுடைய வியாபாரகளத்தில், உணவுப்பொருட்கள், மருந்து வகைகள் வியாபாரத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..

பின் வரும் நாட்களில். தன்னுடைய வியாபாரத்தை, மலேயாவிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து கராச்சியிலும், சிட்டஹாங்கிலும், தன்னுடைய வியாபாரத்தை நிலை நிறுத்தியும், சீறும் சிறப்புடனும், 1971 வரை வெற்றிகரமாக நடந்து வரும் வேளையில், இந்திய‍ பாகிஸ்தான் போரினால்.வியாபாரம் நடத்த முடியாமல், பாகிஸ்தானில் வியாபாரத்தை மூடி விட்டு சென்னை திரும்பினார்.

இவருடைய வாழ்க்கையில் 2 பெரிய போர்கள் விளையாடி இருக்கின்றன.. எல்லாம் நன்மைக்கே.. அல்லாவின் கருணையினால்..

சென்னையில் 1973ம் ஆண்டு, புதிய மகாபலிபுரம் ரோட்டில் (VGP அருகில்) ஹம்மா(HAMMA) ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஆரம்பித்து, கட்டுமான வேலைக்குண்டான ஸ்டீல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தும், இதன் மூலம் பல ஆட்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும், வியாபாரமும், பொது நற்காரியங்களும் செய்து வரும் வேளையில்....

1999ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி, தன்னுடைய 90 வது வயதில் வபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)






ஒரு மனிதன், உலகத்தின் எல்லா மூலை, முடுக்குகளில் சுற்றி வந்து வியாபாரம் செய்திருந்தாலும், தான் பிறந்த மண்னையும், தன்னை உருவாக்கிய தந்தையையும் எவ்வளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு சான்றாக, T.K.H. அவர்களின் எண்ண‌மும், ஆசையுமாகவும், இதயத்தின் உறுதியும் தான், அவர் வபாத் ஆனவுடன், தான் பிறந்த மண்ணிலேயும், தன் 10 வயதில், எப்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வழிகாட்டிய‌ தன் தக‌ப்பனாருடன் சென்றாரோ, அதுபோல் அவரது 90வது வயதிலும், தகப்பனாருடைய கபர்ஸ்தான் பக்கத்திலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்ற "ஹாஜத்தை" அவருடைய பிள்ளைகள் நிறைவேற்றிணார்கள்....

இவருடய நற்காரியங்களில் சிலவற்றின் தொகுப்பு:

1) இளையான்குடியில் "THENMALAIKHAN EDUCATIONAL TRUST' உருவாக்கியது.

2) இளையான்குடியில் பெண்களுக்காக ஒரு தனி உயர் நிலைப்பள்ளி உருவாக்கியதில் ஒருவரும், இப்பள்ளிக்காக, தன்னுடைய தாயார் நினைவாக‌ "பொன்னம்மாள் காதர் சாஹிப் பெண்கள் உயர் நிலைப்பள்ளி'" என்ற பெயரில் ஒரு கட்டிடத்தைக்கட்டி கொடுத்தவரும் இவரே!

3) சென்னையில் 'UNITED ECONOMIC FORUM' நிறுவன உறுப்பினராக இருந்துள்ளார்கள்.

4) இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில், "இஸ்லாமிய கலை களஞ்சியம்" என்ற கட்டிட வளாகத்தை கட்டி அர்ப்பனித்துள்ளார்கள்.

5)இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் "காதிரியா மஸ்ஜித்" உருவாக்கிய பெருமையும் இவரைச்சாரும்.

6)இளையான்குடி, INPT ஜமாத்துக்காக சிங்காரத்தோப்பில் ஜூம்மா பள்ளி நிறுவியவரும் இவரே.

7) சிவகெங்கை இளையான்குடி ரோட்டில், சாத்தரசன்கோட்டை என்ற ஊரில் "காதிரியா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.

8)சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவிலில்,"முஹமதிய மஸ்ஜித்" உருவாக்கி வக்ப் செய்துள்ளார்கள்

9) பரமக்குடியில், பாரதி நகரில் "ஜும்மா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.



இவரிடம், நாங்கள் அதிசயித்த விசயம் இவருடைய எளிமை. பந்தா, பகட்டு என்று ஏதும் அறியாதவர். INPT பள்ளிக்கு அன்றையகால கட்டத்தில், ந‌டந்த‌ சில முக்கியமான நிகழ்வுகளுக்கு, இவருடைய பங்கு போற்றதக்க‌தாகும்.

இன்று இவர்கள் நம்முடன் இல்லை, ஆனால் இவர் உருவாக்கி விட்ட கல்வி, மற்றும் இஸ்லாமிய ஸ்தாபனங்கள், பள்ளிகள் இவருடைய பெயரையும், புகழையும் அழியா வண்ணம், எப்படி "பூ வாடி விட்டாலும் அதனுடைய வாசனையை முகர்ந்தவர்கள் மறக்க மாட்டார்களோ" அதைப்போல், இளையான்குடி மக்களும் TKH எனும் மலரை மற‌க்க மாட்டார்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன்....

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் TKH அவர்களின் இளையமகனார் ஜனாப். முஹமது ஃபரிஸ்டா அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி)

ஜனபா யாஸ்மின் அவர்களின் "கமென்ட்ஸ்" படி இந்த வாக்கியம் நீக்கப்படுகிறது. வாசகருக்கு நன்றி

WEBADMIN HOME

Read more...

ஐந்தாம் வெளிச்சம் : "வள்ளல் பெருந்தகை" அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

>> Saturday, June 20, 2009


இளையான்குடி, புதூரில் ஆலிஜனாப். கட்டச்சி. குப்பை ராவுத்தர் அவர்கட்கும், ஜனாபா மைமூன் பீவிக்கும், மகனாக 1910ல் பிறந்தார்கள்.

புதூரிலேயே, தமிழ்க்கல்வியைப்பயின்றார்கள், இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று அதிகம் கொண்டு, தமிழ் சொற்பொழிவு ஆற்றுபவர்களிடம் நெருங்கி பழகி, தமிழ்ப்புலமை மீது அளவில்லா ஆர்வம் காட்டி வந்தார்கள்.

1921ல் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார், அங்கு போய் ஆரம்பத்தில் ஒரு கடையில் சிப்பந்தியாக பணியாற்றி, நேர்மை, சலியாத உழைப்பு, செம்மையான ஊக்கம், வியாபார யுக்தி, இவற்றை மூலதன‌மாகக்கொண்டு, பல்துறை வர்த்தகத்தின் உரிமையாளராக விளங்கினார்.

இவருக்கு, மலேசியா, தைபிங் நகரில் 'பேராஹ் முஸ்லீம் ரெஸ்டாரென்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே.

மலேசியாவின் பொதுத்துறை, சங்க மன்றங்களில் உறுப்பினராக இருந்து பொதுச்சேவைகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தைப்பிங்கிள் வெளிவந்த 'உதயசூரியன்' என்ற பத்திரிக்கை நலிவுற்ற நிலைக்கு வந்தவுடன், அதற்கு உதவி செய்ய எண்ணம் கொண்டு, அப்பத்திரிக்கைக்கு புதிதாக 'உதயசூரியன் அச்சகம்' நிறுவ உதவியுள்ளார்கள்.

தைப்பிங்கில், இந்திய விடுதலை போராட்ட ராணுவ நடவடிக்கைக்குழு (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) பொறுப்பினராகவும், தைப்பிங் இந்திய முஸ்லீம் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும், பிறகு ஜனநாயக முறைப்படி தேர்வு பெற்று, தலைவராகவும், உப தலைவராகவும் சமுதாய பணியிலும், இந்திய ஹணபி பள்ளி டிரஸ்டியாகவும், கோலாலம்பூரில் உள்ள "பெடரல் தலைந‌கர் தேசிய நெகரா முஸ்லீம் பள்ளிக்கு" தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். தைபிங் இந்து தேவாலய சபா பள்ளி மண்டபத்திற்கும் கணிசமாக உதவியுள்ளார்கள்.

தைபிங் இந்திய அனாதைக்குழந்தைகளின் விடுதிக்கு ஆயுட்கால உறுப்பினராக இருந்து சேவைகளையும், தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

தைப்பிங் மலேசியன் இந்தியர் காங்கிரஸுக்கு தொடக்க கால தலைவராகவும், பின் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவரே என்றால் மிகையாகாது.

1956ம் ஆண்டு தன் புனித 'ஹஜ்ஜை' நிறைவேற்றினார்கள்.


1952ல் இளையான்குடி உயர் நிலைப்பள்ளிக்காக, ஆசிரியர் தங்குவத‌ற்கு ஒரு வீடு ஒன்றை, பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளே கட்டி கொடுத்தார்கள்.

1957ல் புதூரில் இருந்த 'கற் பள்ளிக்கு' இவர்களது தாராள பொருளுதவியால், பள்ளீயின் முக்கியமான மராமத்துகள் செய்யப்பட்டு, அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

இவருடைய ஆரம்ப நிதி உதவியைக்கொண்டும், டிரஸ்டி போர்டார்களும் முன்னின்று மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் டாங்க் கட்டி வீதிகள் தோறும் பைப் வசதிகள் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

1959க்குப்பின், இவர்கள் மத்ரஸாவுக்கென நல்லதொரு புதிய தார்சு கட்டிடத்தை கட்டி தந்துள்ளார்கள்

1972 செப் 29ல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வளாகத்தில் 2வ‌து கட்டிடமாக அல்ஹாஜ் கே.கே.இபுறாகிம் அலி அவர்களின், மறைந்த‌ துனைவியார் நினைவாக 'ம‌ஹ்மூதா பீவி நினைவு கட்டிடத்திற்கு' பல்கலைக்கழக துணை வேந்தர் மு.வரதராஜனார் அவர்கள் தலைமையில் அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அவர்களின் இளைய மகனார் டாக்டர் கே.கே.இ. செளக்கத் அலி அவர்கள் அடிக்கல் நாட்டியும், கட்டிடம் நிறைவு பெற்றவுடன், 1976 ஏப் 30ல், கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அல்ஹாஜ் முனைவர் என்.ஏ. நூர் முஹமது அவர்கள் த‌லைமையில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் தம் துனைவியார் நினைவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இளையான்குடி உயர் நிலைப்பள்ளியில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் நினைவாக, 'இயற்பியல் துறை ஆய்வுக்கூடம்' கட்டிடத்தை கட்டி, அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ. முஹமது அலி அவர்கள் (இவரும் தந்தை வழியிலேயே) பள்ளிக்கு அர்ப்பனிக்கிறார்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தான் பிறந்த மண்ணிலே (புதூரிலே) அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி மேல்நிலைப்பள்ளி 1972ல் உருவானது புதூருக்கும், பக்கத்தில் உள்ள பெறுவாரியான கிராமங்களின் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இன்று இப்பள்ளியினால் மர்ஹூம் அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்களுக்கும், இவர்களால் இப்பள்ளிக்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது

அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்கள்,தைபிங் நகரில் 21‍ 12 1979 அன்று வஃபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)



வள்ளல் பெருந்தகை அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

ஜஸ்டிஸ் ஹாஜி பசிர் அஹ்மது அவர்கள், நேரில் கேட்டுக் கொண்டதன் பேரில்,S.I.E.T. சென்னை. நிர்வாகத்துக்கு ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளார்கள், இன்றும் அந்த நிர்வாகத்தின்(Justice Basheer Ahmed Sayed College for Women, Chennai-600 018) அலுவலகத்தில், தகவல் போர்டில் ஹாஜி கே கே இபுறாஹீம் அலி அவர்களின் பெயரை எழுதி, கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள். S.I.E.T. நிர்வாகத்துக்கு நன்றி.

மற்றும் திருச்சி ஜமால் முஹமது கல்லுரிக்கும் கணிசமான தொகையை வழங்கியுள்ளார்கள்

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ.முஹமதலி அவர்களுக்கு, இணையதளத்தின் சார்பாக மணமார்ந்த நன்றி...)


நிர்வாகம் HOME

Read more...

நான்காம் வெளிச்சம்--ஹாஜி வாஞ்சூர் வி.எம். பீர் முஹம்மது.

>> Sunday, May 10, 2009


தெளிவாக பெரிதாக படிக்க‌ படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

































தெளிவாக பெரிதாக படிக்க‌ படத்தின் மேல் கிளிக் செய்யவும்.










Read more...

இது கதையல்ல!கற்பனையல்ல!சர்சைக்கு முற்றுப்புள்ளி:

>> Friday, April 24, 2009

இது கதையல்ல! கற்பனையல்ல! சர்சைக்கு முற்றுப்புள்ளி:


இன்று நடப்பதென்ன???


ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!


மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..


விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":


எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...


அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?


யாரிடம்?


"1970 ல் தங்கள் தகப்பனார் காலேஜ் கட்டி கொடுத்த விபர‌ங்களை, நீங்கள் ஊரிலேயே இருந்ததினால் கண்டிப்பாக, உண்மையான நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.அந்த விபரங்களை எங்கள் இணையதளத்திற்கு கூறுவீர்களா??‍.. இது கேள்வி...

யாரிடம்???


மர்ஹூம் ஹாஜி.வி.எம். பீர்முஹமதுவின் இளைய மகனிடம்;


அவரின் பதில் இதோ;


" நான் விபரமறிந்து நாட்களில் நான் பார்த்தது, அனேகமாக 1968.69ல் இருவர் காமராஜர் ரோட்டில், ஒருவர் தன்னுடைய கழுத்தில் 'பறை' என்ற மோளத்தை அடித்துக்கொன்டும், மற்றவர் ஒரு போஸ்டர் அடித்த தள்ளு வண்டியைத் தள்ளிக் கொன்டும், நமதூருக்கு கல்லூரி வருகிறது, நன்கொடையினைத் தாருங்கள், என்று சத்தமிட்டும் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறேன்.



அவர்கள் இருவர், ஜனாப்.ஹவுத் நையினார் அம்பலம், ஜனாப். எம்.எஸ்.அபுதாஹிர் (மொட்டச்சி) ஆவார்கள்.. பின்னாளில் அவர்கள் ஒரு நோட்டீஸை என் தாயாரிடம், எங்கள் வீட்டிற்கு வந்து, கொடுத்து இதை தகப்பனாருக்கு (சிங்கப்பூருக்கு) அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொன்டார்கள்..

1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச, தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.



அதன் படி இன்னும் பல பேருடைய உதவி வேன்டி, என்னுடைய தகப்பனார் ஒரு கார் பிடித்து, அதில் அவரும், ஹவுத் நைனார், ஓ.ஆர்.இபுறாஹிம் அலி, டாக்டர்.ஏ.ஐ.முகம்மது சரீப், எம்.எஸ்.முஹமது உசேன், ஆகியோர் இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள‌ ஒரு பெரிய கொடை வள்ளலைப் பார்த்து கல்லூரிக்கு நிதி வேண்ட, அவர்களோ, நிதி தருவதாகவும், கல்லூரிக்கு அவர்கள் குறிப்பிட்ட பெயரை வைக்க வேன்டியும், கேட்டுக் கொள்கின்றனர்.. இதை யோசித்து இக் குழு மனம் குழம்ப,


என்னுடைய தகப்பனார்,'"நைனாரெ, ரொம்ப யோசிக்காதீங்க, நானாச்சு, கல்லூரிக்கழக விருப்பப்படி குறித்த நேரத்தில் காலேஜ் திறந்துடுவோம்"
என்று தைரியம் கூற,


ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெய‌ரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..





எங்கள் தகப்பனார் கட்டிட வரைபடப்படி, முதன் முதல் கட்டிடத்தை தானே நின்று கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று, அதற்குன்டான் வேலையை தொடங்கிவிட்டார்,


இக் கல்லுரி முகப்பு இடம், பரமக்குடி ரோட்டில் முகப்பு வாயில் வர வேண்டும் என்பதற்காக 19/04/70 ல் ஜனாப் அபுதாஹிரிடம், 2 ஏக்,78 செண்டு இடம் கிரையம் வாங்கி, மறு நாளே, 20/04/70 அன்று கல்லூரிக்கழகத்திற்கு (இளை சப் ரி.எண் 472/70) இனாமாக ரிஜிஸ்தர் செய்து கொடுத்ததினால்,





28/04/1970 அன்று நம் கவர்னர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களால், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது..



அதற்குப்பின் கட்டிட வேலைகள் மிக விறு விறுப்பாக, நடக்க,
எங்களுடைய பண்னையில், (அரியாண்டிபுர கிராம ஆட்கள்) வேலை செய்த அணைவரும் இக்கட்டிடத்துக்காக உழைத்தார்கள்
.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹ‌வுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.



ஆனால், இலவசம் விரும்பாததினால் தன்னுடைய 55 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொன்டு(அரியாண்டிபுர தோப்பில்), கற்றபின் சைக்கிளில் சென்று கட்டிட வேலைகளை கவனித்தார். ஜனாப் அமீன் நைனார் அவர்களும் தினமும் கட்டிட இடத்திற்கு சென்று கவனித்து வருவார்கள்.



இச் சமயத்தில் என்னுடைய ச‌கோதரர் ஒருவரும், ஊரில் இருந்ததால் அவரும் இவ்விசயத்தில் உதவியாக இருந்தார். கட்டிடம் முழுமை பெறும் போது, மேற்கூரை சிமென்ட் சீட் போடும் பொழுது (இவ் வேலையை திரு.மைக்கேல் ஆசாரி அவர்கள் செய்தார்)


முடியும் தருவாயில்,ஒரு இரவில் பயங்கரமான சூரைக்காற்று வீசியதால் கூரை சரிந்து விழ, உடணே அரியாண்டிபுரத்திலிருந்து 100 பேருக்கு மேல் அழைத்து வந்து சரி உடனடியாக‌ செய்தது நான் கண்னால் பார்த்த விசயம்.

திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் சிறப்புற செய்து முடித்து,



மே 1970ல் தகப்பனார் கரஸ்பான்டென்ட் ஆகவும் கல்லூரிக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தகப்பனாரால் ஆசிரியர்கள், அலுவல்கஸ்தர்கள், சிப்பந்திகள் ஆகியேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போடப்படுகிறது.
ஜுலை 1,1970 ல் கல்லூரி தொடக்கம்

ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம்.

கண்ணியமிகு காயிதே மில்லத்
அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,ம‌ற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மற‌க்கமுடியாத நிகழ்ச்சி..

அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.


அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் இன்றும் நாங்கள், திரும்ப, திரும்ப கேட்டு ரசிக்க முடிகிறது.


மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கோர்வையான, அடுக்கு மொழி பேச்சிலோ" நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம், ஊருக்கு ஊர் ஒர் பீர் முஹமது வேண்டும்" என்பதும்,

ஜனாப்.அமீன் நைனார் ஹவுத் அவர்கள் இயற்கையான,சாதாரன பேச்சு நடையில், பேச்சு முழுக்க என் தகப்பனாருடைய உழைப்பைப்பற்றி, வெளிப்படையான பேச்சு தான், சுவரசியமானது ஆகும்..


அதுமுதல் கல்லூரி நல்லதொரு பீடு நடை போட்டு வந்தது, 14/08/1970ல் கல்லூரி பொதுகுழு கூட்டத்தில் ஒரு சில மெம்பர்கள் நடந்து கொண்ட விதம்,என் தகப்பனார் மனதைப் புன்படுத்தி, ஜனாப்.அமீன் நைனார் ஹவுத அவர்கள் என்னுடைய தக‌ப்பனாரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாமல் 25/08/190 ல் தன்னுடய கரஸ்பான்டென்ட் பத‌வியை ராஜினாமா செய்தார்க‌ள்..

இச் சம்பவத்தை உருவாக்கிய "ஒட்டுண்ணிகளையும்" "சாருண்ணிகளையும்" நாங்கள் அறிவோம்..

இக் கல்லூரி உருவாக்க, என்னுடைய தகப்பனாருக்கு உறுதுனையாய் நின்ற மர்ஹூம்.ஜனாப். அமீன் நெயினார் ஹவுத் அம்பலம் அவர்களுக்கு என்னுடைய‌ இத‌ய பூர்வமான நன்றி.. இவர்,(அமீன் நெயினார் ஹ‌வுத்) இதைத் தவிர, எனக்குத் தெரிந்த, நம் ஊருக்கு, செய்த நல்லவைகளை, பிற‌கு தெரிவிக்கிறேன்..


இவையாவும் நம் ஊரில்,அப்பொழுது இருந்த, இப்பவும் இருக்கின்ற நிறைய பேர் மிக,மிக நன்றாக அறிவார்கள்.. ஆனால் அதில் சிலர் வாய்மூடி மவுனியாகி விட்டார்கள்.. என்ன காரனமோ?!



"யாம் அறியேன் பராபரமே".

என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..

**************************


எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..


நிர்வாகம்

Read more...

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART - 3

>> Monday, April 20, 2009


தரித்திரத்தை மறைக்கலாம்
சரித்திரத்தை மறைக்கமுடியுமா???


"சிலர்,ஊசி முனையில், ஒட்டகத்தைக் கூட நுழைய வைத்து விடுவார்கள் தன்னுடைய ஆதாரமில்லாத எழுத்தால், ஆனால், தற்போது 'டைனோசரைய' நுழைய வைக்க முயலுவது!!! விளக்கம் சொல்லியேயே.............; 'முடியல'


நீடுர் இணைய தளத்திற்கும், புதுக்குளத்தான் அவர்களுக்கும், இளை. சிட்டிசனுக்கும், மற்றும் பழைய கல்லூரி மாணவருக்கும் இந்த, கீழ்க்கண்ட ஆதாரங்கள் பதிலாக அமையும்.


இதற்கான விபரங்களை வாஞ்ஜூர் பீர் முஹமது குடும்பத்தாரய விளக்கம் கேட்டால் என்ன? என்று எங்களுக்கு தோன்றியது. அதனால் அவர்களுடையெ மகனார்கள் 3 பேருக்கு மெயில் அனுப்பி கேட்டதில், எங்களை மதித்து, அவருடைய மகனார் ஒருவர், இந்த விபரங்களை மட்டும் அனுப்பினார், மேலும் நமக்கு எந்த விசயமாய், நாம் விளக்கம் கேட்கிறோமோ,
அதன் சம்பந்தமான விபரங்களை நமக்கு அளிக்க, அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்


டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது"



"I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest"
(சொல்லுறதை சொல்லிட்டோம்.. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க;)
"இதற்கான விளக்கம் கீழே"


Mr.N.A. Ameer Ali appointed as Pricipal by Correspondent of Dr.ZHC. ( Dr ZHC Correspondent letter to DCE Madras)

Dr.ZHC Correspondent letter to Registrar University of Madurai


















அன்று நடந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரித் தொடக்க விழாவில்,கல்லூரின் கரஸ்பான்டென்ட் ஹாஜி வி எம் பீர்முகம்மது ஆற்றிய வரவேற்புரை:‍= (ஆடியோ ரிக்கார்டிங்கிலிருந்து )

அஸ்ஸலமு அலைக்கும்..
அவைத்தலைவர் அவர்களே! மான்புமிகு அமைச்சர் அவர்களே! கல்லூரியை வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே! நன்பர்களே! உங்கள் அணைவருக்கும் என்னுடையெ அன்பு கலந்த வணக்கம்.

அயராது பாடுபட்டு கட்டி முடித்த கல்லூரியின் தொடக்க நாள் இன்று நமது உள்ளங்கள் மகிழ்ச்சியினால் குதுகளிக்கும் நாள். இந்த விழாவிற்கு கண்ணியத்தின் காவலராம் காயிதேமில்லத் அல்ஹாஜ்.முஹமது இஸ்மாயில் சாஹிப். எம்.பி அவர்கள் தலைமை தாங்க இண்ங்கி சிறப்பு செய்திருப்பதால் எங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்கிற்து. அவர்களை கல்லூரிக்கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கின்றேன்,

உயர் கல்வியை இவ்வட்டார மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் இக்கல்லூரி கல்வி அமைச்சர் அவர்களால் திற்க்கப்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.


மாண்புமிகு அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இங்கு வந்து சிற்ப்பு செய்து இருப்பது எங்களது உள்ளத்தில் தேன் பாய்ச்சி உள்ளது நாவலர் அவர்களை இளையான்குடி கல்லூரியின் சார்பில் நெஞ்சார வருக வருக வரவேற்கின்றென்.

நமது கல்லூரிக்கு வாழ்த்து வழங்க வந்திருக்கும் மதுரை பல் கலைக்கழக ரிஜிஸ்தரர் திரு பெருமாள் அவர்களையும், வழக்கறிஞர் திரு பழனி வேல் ராஜன் அவர்களையும், நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு வி. மலைக்கண்னன் அவர்களையும் வருக வருக என்று மனமுவந்து வர வேற்கின்றேன்.

இக் கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்த உள்ளங்களையும்,கூடியுள்ள பெரியோர்களையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வருக வருக என்று
ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழக சார்பில் வரவேற்கின்றேன்.....


நிர்வாகிகள்
****************************

Read more...

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP