ஐந்தாம் வெளிச்சம் : "வள்ளல் பெருந்தகை" அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

>> Saturday, June 20, 2009


இளையான்குடி, புதூரில் ஆலிஜனாப். கட்டச்சி. குப்பை ராவுத்தர் அவர்கட்கும், ஜனாபா மைமூன் பீவிக்கும், மகனாக 1910ல் பிறந்தார்கள்.

புதூரிலேயே, தமிழ்க்கல்வியைப்பயின்றார்கள், இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று அதிகம் கொண்டு, தமிழ் சொற்பொழிவு ஆற்றுபவர்களிடம் நெருங்கி பழகி, தமிழ்ப்புலமை மீது அளவில்லா ஆர்வம் காட்டி வந்தார்கள்.

1921ல் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார், அங்கு போய் ஆரம்பத்தில் ஒரு கடையில் சிப்பந்தியாக பணியாற்றி, நேர்மை, சலியாத உழைப்பு, செம்மையான ஊக்கம், வியாபார யுக்தி, இவற்றை மூலதன‌மாகக்கொண்டு, பல்துறை வர்த்தகத்தின் உரிமையாளராக விளங்கினார்.

இவருக்கு, மலேசியா, தைபிங் நகரில் 'பேராஹ் முஸ்லீம் ரெஸ்டாரென்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே.

மலேசியாவின் பொதுத்துறை, சங்க மன்றங்களில் உறுப்பினராக இருந்து பொதுச்சேவைகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தைப்பிங்கிள் வெளிவந்த 'உதயசூரியன்' என்ற பத்திரிக்கை நலிவுற்ற நிலைக்கு வந்தவுடன், அதற்கு உதவி செய்ய எண்ணம் கொண்டு, அப்பத்திரிக்கைக்கு புதிதாக 'உதயசூரியன் அச்சகம்' நிறுவ உதவியுள்ளார்கள்.

தைப்பிங்கில், இந்திய விடுதலை போராட்ட ராணுவ நடவடிக்கைக்குழு (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) பொறுப்பினராகவும், தைப்பிங் இந்திய முஸ்லீம் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும், பிறகு ஜனநாயக முறைப்படி தேர்வு பெற்று, தலைவராகவும், உப தலைவராகவும் சமுதாய பணியிலும், இந்திய ஹணபி பள்ளி டிரஸ்டியாகவும், கோலாலம்பூரில் உள்ள "பெடரல் தலைந‌கர் தேசிய நெகரா முஸ்லீம் பள்ளிக்கு" தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். தைபிங் இந்து தேவாலய சபா பள்ளி மண்டபத்திற்கும் கணிசமாக உதவியுள்ளார்கள்.

தைபிங் இந்திய அனாதைக்குழந்தைகளின் விடுதிக்கு ஆயுட்கால உறுப்பினராக இருந்து சேவைகளையும், தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

தைப்பிங் மலேசியன் இந்தியர் காங்கிரஸுக்கு தொடக்க கால தலைவராகவும், பின் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவரே என்றால் மிகையாகாது.

1956ம் ஆண்டு தன் புனித 'ஹஜ்ஜை' நிறைவேற்றினார்கள்.


1952ல் இளையான்குடி உயர் நிலைப்பள்ளிக்காக, ஆசிரியர் தங்குவத‌ற்கு ஒரு வீடு ஒன்றை, பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளே கட்டி கொடுத்தார்கள்.

1957ல் புதூரில் இருந்த 'கற் பள்ளிக்கு' இவர்களது தாராள பொருளுதவியால், பள்ளீயின் முக்கியமான மராமத்துகள் செய்யப்பட்டு, அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

இவருடைய ஆரம்ப நிதி உதவியைக்கொண்டும், டிரஸ்டி போர்டார்களும் முன்னின்று மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் டாங்க் கட்டி வீதிகள் தோறும் பைப் வசதிகள் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

1959க்குப்பின், இவர்கள் மத்ரஸாவுக்கென நல்லதொரு புதிய தார்சு கட்டிடத்தை கட்டி தந்துள்ளார்கள்

1972 செப் 29ல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வளாகத்தில் 2வ‌து கட்டிடமாக அல்ஹாஜ் கே.கே.இபுறாகிம் அலி அவர்களின், மறைந்த‌ துனைவியார் நினைவாக 'ம‌ஹ்மூதா பீவி நினைவு கட்டிடத்திற்கு' பல்கலைக்கழக துணை வேந்தர் மு.வரதராஜனார் அவர்கள் தலைமையில் அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அவர்களின் இளைய மகனார் டாக்டர் கே.கே.இ. செளக்கத் அலி அவர்கள் அடிக்கல் நாட்டியும், கட்டிடம் நிறைவு பெற்றவுடன், 1976 ஏப் 30ல், கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அல்ஹாஜ் முனைவர் என்.ஏ. நூர் முஹமது அவர்கள் த‌லைமையில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் தம் துனைவியார் நினைவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இளையான்குடி உயர் நிலைப்பள்ளியில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் நினைவாக, 'இயற்பியல் துறை ஆய்வுக்கூடம்' கட்டிடத்தை கட்டி, அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ. முஹமது அலி அவர்கள் (இவரும் தந்தை வழியிலேயே) பள்ளிக்கு அர்ப்பனிக்கிறார்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தான் பிறந்த மண்ணிலே (புதூரிலே) அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி மேல்நிலைப்பள்ளி 1972ல் உருவானது புதூருக்கும், பக்கத்தில் உள்ள பெறுவாரியான கிராமங்களின் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இன்று இப்பள்ளியினால் மர்ஹூம் அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்களுக்கும், இவர்களால் இப்பள்ளிக்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது

அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்கள்,தைபிங் நகரில் 21‍ 12 1979 அன்று வஃபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)



வள்ளல் பெருந்தகை அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

ஜஸ்டிஸ் ஹாஜி பசிர் அஹ்மது அவர்கள், நேரில் கேட்டுக் கொண்டதன் பேரில்,S.I.E.T. சென்னை. நிர்வாகத்துக்கு ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளார்கள், இன்றும் அந்த நிர்வாகத்தின்(Justice Basheer Ahmed Sayed College for Women, Chennai-600 018) அலுவலகத்தில், தகவல் போர்டில் ஹாஜி கே கே இபுறாஹீம் அலி அவர்களின் பெயரை எழுதி, கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள். S.I.E.T. நிர்வாகத்துக்கு நன்றி.

மற்றும் திருச்சி ஜமால் முஹமது கல்லுரிக்கும் கணிசமான தொகையை வழங்கியுள்ளார்கள்

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ.முஹமதலி அவர்களுக்கு, இணையதளத்தின் சார்பாக மணமார்ந்த நன்றி...)


நிர்வாகம் HOME

2 comments:

Anonymous June 21, 2009 at 10:01 PM  

ஹாஜி கே.கே.இப்ராஹீம் அலி அவர்களுடைய அறிய தக்வல்கள் தங்களின் ஐந்தாம் வெளிச்சத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். உண்மையிலேயே இதில் உள்ள பல தகவல்கள் இன்றைய இளம் தலை முறையினர் பலருக்கு தெரியாத ஒன்றாகும். வெளிச்சத்திற்காக நீங்கள் செய்யும் பணி அளவற்றது. இந்த பணி தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.

ilayangudians June 25, 2009 at 6:07 PM  

நிறை குடம் தளும்பாது என்பார்கள். அதுபோல், கல்வி வளர்ச்சிக்கும், அரசியல் பங்களிப்பிற்கும், சமுதாய நலனிற்கும் உதவிய பெருமகனார் பிறந்த நம் இளையான்குடி, இப்போது - தற்புகழ்ச்சி, சுயநலம், சுரண்டல், இறை அச்சமின்மை, பகட்டு, தற்பெருமை முதலிய குணங்கள் மட்டுமே நம்மிடையே எஞ்சி இருக்க காண்கின்றோம். இவற்றை மற்ற துவா செய்வோம்.

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP