மூன்றாம் வெளிச்சம்.

>> Friday, April 17, 2009

முதல்வெளிச்சத்திலும், இரண்டாம் வெளிச்சத்திலும் வெளியாகி உள்ள கணவான்கள் இருவருக்கும் பல பின்னணி,சொந்தங்கள்,பந்தங்கள் உடன் பிற‌ப்புகள்,முன்னோர்களின் ஆஸ்தி ஆகிய பக்க பலங்களைக்கொண்டவர்கள்..

இளையான்குடியில் நெருங்கிய சொந்தங்களின் ஆதரவு இல்லாமல்,ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிறக்கும் முன்னே தகப்பனை இழந்து,இரு சகோதரிகளுடன்,சொல்லமுடியாத வறுமையுடன்,படிக்க எவ்வித வசதியில்லாமலும் தன் குடும்பத்தை முன்னேற்ற எண்ணி தன்னந்தனியே கடும் உழைப்புடன் போராடி,ஆளும் வள‌ர்ந்து, அறிவும் வளர்ந்து, அதுதாண்டா வள‌ர்த்தி, என்பதற்கேற்ப, பின்னாளில் நல்லதொரு "வெளிச்சத்திற்கு" வந்தவர் இவர்

இதைத்தான் 'சிங்கம் சிங்கிளாக வரும்' என்று தற்சமயம் விளிம்புகிறார்கள்..

இனி இவரால் ஊருக்கு என்ன நன்மை?

இவருக்கு ஊர் என்ன செய்தது என்பதை விட

இவர் ஊருக்கு என்ன செய்தார்? என்பது தானே முக்கியம்!


'தனக்குப்பிறகுதான் தான‌மும்,த‌ர்மமும்'என்பது பழமொழி.


*தான் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஏறும் போதே,தன் பின்னே பலரையும் கைகோர்த்து ஏற்றி விட்டவர். எப்படி???. தான், பல நபர்களுக்கு வேலை கொடுக்க வேன்டும் என்று எண்ணி 1940 களில் நமதூரில் 'ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ்'என்ற நிறுவன‌த்தை ஆரம்பித்து சுமார் 20லிருந்து 25 பேர் வாழ வழி வகுத்தவர்...

*தன்னுடைய சொந்த வீட்டின் கிணற்றிலிருந்து, நமது ஊர் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க,வீட்டின் வெளியே குழாய் வைத்து சப்ளை செய்து, தன்னால் இயன்றவரை தண்ணீர் பிரச்சனையை சமாளித்தவர்..

**மேலும் பஞ்சாயத்து தொட்டியிலிருந்து 2 இடத்தில் தன் சொந்த செலவில் பூமிக்கு அடியில் பைப் லைன் பதித்து, குழாய் வைத்து தண்ணீர் சப்ளை செய்ய‌ உதவியவர்..

*இளையான்குடி பெண்கள் உயர் நிலைப்பள்ளியை ஆரம்பிக்க 24/06/1963ல் தனது சொந்த கட்டிடத்தையும்(65,சுல்தான் அலாவுதீன் தெரு), பொருளும் கொடுத்து ஆரம்பித்து பின் முதல் தலைவர் ஜனாப் பி.எஸ். முஹமது இபுறாஹிம் அவர்களுக்குப்பின் தலைவராக இருந்து உழைத்து வந்தவர்..

*கவர்மென்ட் லோன் தங்கப்பத்திரம்,வார் ஃப‌ன்ட் (war fund), ஜவஹர்லால் நிதி மற்றைய மத்திய அரசு பொது நிதிகளுக்கு தாராளமாக கொடுத்தவர்..


*இளையான்குடியில் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தொடங்குவதற்காக,முதல் கட்டிடம் கட்ட மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை(2 ஏக்கர் 78 செண்டு) கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்திருக்கிறார்..


**மேற்படி காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார்..

***மேற்படி காலேஜ் முதல் கரஸ்பான்டன்ட் ஆக பணி புரிந்து அக் கட்டிடத்தையும், காலேஜையும் திற‌ப்புவிழாச்செய்து,கல்லூரி முதல்வராக ஜனாப் கேப்டன் அமீர் அலி,மற்றும் திரு.ஆல்பர்ட் தேவசகாயம்; ஜனாப்.பாதுஸா ; ஜனாப் உஸ்மான்; ஜனாப் சிக்கந்தர்; ஜனாப் கமாலுதீன்;திரு ராஜ சேகரன் மற்றும் சில மிகச் சிறந்த பேராசிரியர்,விரிவுரையாளர்களையும் நியமனம் செய்தவர்.


அன்று விதைத்த வித்து இன்று பூத்துக் குலுங்குகிறது..


*இளையான்குடியில், இந்திரா காங்கிரஸை (ஜெ.காங்கிரஸ், இண்டிகேட்), தானும், சாத்தனியைச் சார்ந்த சீமான் அவர்கள், ஜனாப். ஜக்கரியா அவர்கள். ஜனாப். அமுக்குடியான் சுக்கூர் அவர்கள். திரு. முத்து அவர்கள். எல்லோரும் சேர்ந்து கட்சியை, தன்னுடைய சொந்த கட்டிடத்தில்(94,காமராஜர் ரோடு மேல் மாடி) ஆரம்பித்து,தானே தலைவராக‌ தேர்தெடுக்கப்பட்டும், கட்சி வளர வகை செய்தவர்..


**இந்திரா காங்கிரஸை இளையான்குடியில் ஆரம்பித்து வைத்தத‌ற்காக அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் கைப்பட எழுதிய வாழ்த்துக்கடிதம் பெற்றவர்..

*இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, 5வது நிர்வாக கமிட்டியில் பொக்கிசதார‌ராக இருந்து உள்ளார்..


*இளையான்குடி நெசவு பட்டடை ஜமாத் ட்ரஸ்ட் த‌லைவராகவும்,காரியதரிசியாகவும் இருந்து, மானேஜிங் ட்ரஸ்டியாக தேர்தல் மூலம் தேர்ந்த்தெடுக்கப்பட்டவர்.

** மேற்படி ஜமாத் பள்ளிக்கான பூர்வீக ஆதாரங்களைதிரட்டி ஆவணங்களை ஒழுங்குபடுத்தினார்..

***ஜமாத்துக்கு சொந்தமான வீடுகள்,கடைகள் ஆகியவற்றின் அடிமட்ட வாடகையை,தற்கால நிலமைக்கேற்ப,பல வழ‌க்குகள் மூலம் வெற்றிகண்டு வாடகை வருமான‌த்தை உயர்த்தினார்(இதனால் பல பகைகளை அல்லாவின் பள்ளிக்காக தேடிக்கொண்டவர்)..

****சிங்காரத் தோப்பின் முகப்பில்,தன்னுடைய செல்வாக்கால், ஆலிஜனாப்.தென்மலைக்கான் அப்துல் ரஹீம் அவர்களிடம் நன்கொடை பெற்று,' தென்மலைக்கான் மதுர கவி பாட்சா புலவர்' நினைவாக அரபி மத்ரஸா நிறுவியவர்..

*****சிங்காரத்தோப்பின் மதரஸாவுக்கு பக்கத்தில், தன் தமக்கை மரியம் பூவா நினைவாக காம்பவுன்ட் சுவர்,தன்னுடைய செலவில் எழுப்பினார்..


******பள்ளியின்,காமராஜர் ரோடு காம்பவுன்ட் சுவரை இடித்துவிட்டு,பள்ளியின் வருமான‌த்தை உயர்த்த,கீழே கடைகளும்,மேலே ரூம்களும் கட்டி விட்டவர்..

*******பள்ளிக்கென்று,ஒரு எலிமென்டரி ஸ்கூல் கட்ட,ஜாமாத்தாரிடம் அனுமதி வாங்கியவர்.இத் திட்டம் பிற்காலத்தில் நிறைவு பெற்றது..

********புதிய ஜும்மா பள்ளிக்கு ஜென்ரேட்டர் வாங்குவதற்காக அப்போதைய ட்ரஸ்டி ஜனாப் கே.டி.காஜா கமாலுதீனிடம் ஒரு தொகையை வழ‌ங்கினார்..

*கீழ முஸ்லீம் தெருவின் முடிவில்,தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 பெரிய கிணறுகள் போட்டு,தண்ணீரை பம்ப் மூலம் மேல் தொட்டியில் ஏற்றி, பெண்கள் மறைவாக குளிப்பத்ற்கு ஏதுவாக நாலாபுறமும் சுவர் கட்டி விட்டு,பெண்களின் பாராட்டைப்பெற்றவர்..


*அரியாண்டிபுரத்தில்,ஹரிஜன் குடியிருப்பு காலணிக்காக,தன்னுடய சொந்த நஞ்சை நிலத்தை (சுமார் 1 ஏக்கர் 70 சென்டு) அரசுக்கு தாணமாக வழங்கியுள்ளார்..

* இன்னும் நினைவில் சிக்காதவைகள் உள்ளன!


இவரைப் பற்றி பொதுவாக:

சீதன‌ம் கொடுப்பதும்,வாங்குவத‌ற்கும் மிக கடுமையான எதிரி.

இறைவனுக்கும்,தன் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கேனும் அஞ்சியதில்லை என்பது ஊரரிந்த உண்மை..

இவருக்கு நமதூரிலும்,சென்னையிலும் ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும்,சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில், ஜூபிடர் லாட்ஜும்,சிங்கப்பூரில் காமன்வெல்த் ப்போர்ஸஸுக்கு அங்கீகாரம் பெற்ற கான்ட்ராக்டர் ஆகவும்,தொழில்கள் உள்ளன..

இவருடைய குடும்பமே,இளையான்குடியில் இருந்து முதன் முதலில் சிங்கப்பூரில் வசித்த குடும்பம் என்பது நிதர்சனமான உண்மை..

நமதூரில் விவசாயத்திற்கென்று வருமான‌ வரி கட்டியவர்கள் மூவர்,அதில் இவறொன்று,அண்ணாமலைச்செட்டியார்,தூங்காலயன் சிக்கந்தர் ஆகும்

1968,69 களில், 1 ஏக்கருக்கு நெல் விளைச்சல் மிக அதிகமான சாகுபடியைக்காட்டி இராமநாதபுர மாவட்டத்தின் சிறந்த விவசாயி என்று அரசாங்க கெஜட்டில் பதிவு பெற்றிருக்கிறார்..

1978,79 களில்,சிவகங்கை மவட்டத்திலே மல்பெரி செடி வள‌ர்த்து,அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து,ஆல் இந்திய ரேடியோவில் பேட்டி காண‌ப்பட்டவர்..

சிங்கப்பூரில், சுப்ரீம் கோர்ட்டில், தனக்கு கிடைக்காத நியாயத்தின் வழ‌க்கை,லன்டனில் உள்ள மிக உயர்ந்த கோர்ட் ஆன "பிரிவி கவுன்சில்" "PRIVY COUNCIL"க்கு எடுத்துச் சென்று,வழ‌க்காடி, வெற்றி கண்டு, சிங்கையில் பிரபல நியூஸ் பேப்பரான "ஸ்டெரைட் டைம்ஸ்" ல் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக, வெளி வந்தது. இந்த பெருமைக்குரிய ஒரே இளையான்குடியைச் சார்ந்தவர் யார் என்றால் 'அவரும் இவரே'

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
சிறு மாற்றுக்குறையாத மன்னவர்
இவரென்று போற்றி புகழ வேண்டும்"
"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர்.வி.எம். பீர் முஹமது" அவர்கள்
***************************************
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் பயோ டேட்டா படிக்க க்ளிக் செய்யவும்.
--> இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.-- மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
<--
************************************************
ணைய தள நிர்வாகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
New comment
fromAnonymous
toilycrazyboys@gmail.com

dateSat, Apr 18, 2009 at 10:12 PM
subject[இளையான்குடியின் வெளிச்சம்.]
.google.com

details 10:12 PM (5 minutes ago)

Anonymous has left a new comment on your post "மூன்றாம் வெளிச்சம்":

நான் கல்லுரியில் படிக்கும் காலத்தில் அன்றைய எங்களது முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள் ,அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் நான் கண்டதில்லை.

என்னுடைய அக்காலத்து க்ரூப் மாணவர்கள் யாரையும் கேட்டு உறுதி படுத்திக் கொள்ளலாம்.

இவ்விணைய தளத்து பதிவுகளை காணும் பொழுது மனம் வேதனை அடைகிறது.


சாகிர் உசேன் கல்லூரி பழைய மாணவன்
Posted by Anonymous to இளையான்குடியின் வெளிச்சம். at April 18, 2009 7:42 PM

1 comments:

Anonymous April 18, 2009 at 10:12 PM  

நான் கல்லுரியில் படிக்கும் காலத்தில் அன்றைய எங்களது முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள் ,அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் நான் கண்டதில்லை.

என்னுடைய அக்காலத்து க்ரூப் மாணவர்கள் யாரையும் கேட்டு உறுதி படுத்திக் கொள்ளலாம்.

இவ்விணைய தளத்து பதிவுகளை காணும் பொழுது மனம் வேதனை அடைகிறது.


சாகிர் உசேன் கல்லூரி பழைய மாணவன்

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP