முதல் வெளிச்சம்
>> Thursday, April 9, 2009
இளையான்குடி: இந்த பெயர் எப்படி வந்தது,இதன் வரலாறு என்ன? என்பதை பல கருத்துக்கள்!. சில புத்தக வாயிலாகவும்,சில ஊடகங்கள் வாயிலாகவும் நாம் நன்கு அறிவோம்..இதற்கு விளக்கம் தேவையில்லை..
ஆனால் ஒரு ஊர் என்றால், அது அங்கு வாழும் மக்களின் விகிதாசாரப்படி பள்ளிவாசல், கோயில்,தேவாலயம்,மற்றும் முறையே,பஸ் ஸ்டாண்ட், பஞ்சாயத்து போர்ட், ஆரம்ப பள்ளிக் கூடம்,மருத்துவ மணை, காவல் நிலையம், உயர் கல்வி கூடங்கள், அரசாங்க சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், மிக அருகில் ரயில்வே நிலையம், இன்னும் பல அத்தியாவசிய தேவைக்கான பொது ஸ்தாபனங்கள் இருந்தால், ஊர் வளர்ச்சிக்கேற்ப பேரூராட்சியோ, நகராட்சியாகவோ விளங்கும்..
நம் ஊர் மக்களின் விகிதாசாரப்படி, அவரவர்கள் தேவைக்கு ஏற்ப பள்ளிவாயல்கள், கோயில்கள், சர்ச்சுகள், குளங்கள், ஊரணிகள் உருவாக்கப் பட்டு இருக்கின்றன.
ஆனால் மற்ற சில முக்கிய ஸ்தாபனங்கள் யாரால் இளையான்குடியில் உருவாக்கப்பட்டது என்று இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்தளவுக்கு தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி???
இப்படி சில வரலாற்று உண்மைகள் மறக்கப்படுகின்றன! மறைக்கப்படுகின்றன! மறுக்கப்படுகின்றன! ஏன்? ஏன்? ஏன்?
நமதூரில்,இவர்களெல்லாம் எந்தவித பதவிக்கோ, பணத்துக்கோ, படோடோபத்துக்கோ ஆசைப்பட்டதாக தெரியவில்லை.
இன்றோ; அய்யகோ, என்னவென்று சொல்வதப்பா???
இளையான்குடிக்கென்று, நமது பக்கத்து ஊரைச் சார்ந்த ஒரு மிகப் பெரிய செல்வந்தர் செய்த செயல்கள், காரிய்ங்கள், தானங்கள், தர்மங்கள் இவைகளை செய்தவர் யார்? யார் அந்த சீமான்?? யார் அந்த புண்ணியவான்???
எத்தனை பேருக்குத் தெரியும்!பதில் சொல்வார்களா?!
இன்று நமதூரில் இயங்கும் பஸ் ஸ்டாண்ட்,பஞ்சாயத்து போர்டு,பக்கத்தில் முன் இருந்த ஊரணி( ஆரம்ப) பள்ளிக்கூடம், ஆண்கள் ஆஸ்பத்திரி, இவைகளுக்கெல்லாம் முன்னால் இருக்கும் சுமார் 80 அடி ரோடு உள்பட, உள்ள தன்னுடைய சொந்த நிலத்தை தானமாக கொடுத்தும்;
அன்றைய இளை.உயர் நிலைப்பள்ளி ஆரம்பிக்க முன்ணோடியாக, ரொக்கமாக ரூ 10,000/=(ஒப்படையார் குடும்பம் அளித்த தொகைக்கு இணையாக)மும், பள்ளி வளாகத்திற்குள்ளே ஆசிரியர்கள் குடியிருக்க தனித்தனியே 4 வீடுகள் கட்டிக் கொடுத்தும்;
நமது ஊருக்காக, ரயில்வே தொடர்பு வேண்டும் என்று மிக தாராள மனதுடன்,அவருககு சொந்தமான, பரமக்குடியில் தற்சமயம் ரயில் நிலையம் இயங்கும் இடத்தில் அதிகமான பரப்பளவு கொண்ட இடத்தை தானமாக வழங்கியுள்ளார்:
அவரைப் பற்றி இன்னும் எமக்கு தெரிந்தவை:
ஆங்கிலேயர் காலத்தில் நீதி மன்றங்களில் 'ஜூரி' ஆக அங்கம் வகித்தவர்.
பர்மாவில் மிகப் பெரிய வணிகர்களில் ஒருவர்.
பெருந்தலைவர் காமராஜுடன் நன்கு அறிமுகமானவர்.
நமதூரில் முதலில் 'செவர்லே' 'டாட்ஜ்' போன்ற ஆடம்பர கார்கள் உபயோகித்தவர்.
இவர்தான் நமதூர் முதல் பஞ்சாயத்து போர்டு ' சேர்மன்'
ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பல கிராமங்கள் சொத்தை இழந்தவர்.
இவருடைய தந்தை 'கான்பகதூர் ' பட்டம் பெற்றவர்.
இவரும் "கான்சாகிப் " பட்டம் பெற்றவர்.
இன்னும் பல இவரைப் பற்றி, எங்களுக்கு தெரியாதவை யாருக்கேனும் தெரிந்திருந்தால் எங்களுக்கு எழுதவும்.. நிச்சயமாக பதிவு செய்வோம்..
இவரைப்போல் இல்லாவிட்டாலும்,இவருக்கு அடுத்தபடியாக உள்ளோரையும், நம் ஊரில் ஒரு சில புண்ணியவான்களால் மறைக்கப்படுகிறார்கள். அவர்களும் இந்த இணையதளத்தில் < வெளிச்சத்துக்கு > கொண்டு வரப்படுவார்கள். நிச்சயமாக. ஆமீன்.
இப்பொழுதாவது புதிருக்கான விடை தெறிகிறதா?
இவர் நினைத்து இருந்தால் பஞ்சாயத்து போர்டை இவருடைய ஊரிலேயே வைத்திருக்க முடியும்...
இன்னும் இவரைப்ப்ற்றி அறிந்தும்,அறியாது போன்றும், தெரிந்தும்,தெரியாது போலவும் இருப்பவர்களைப்பற்றி நாம் கவலைப்பட போவதில்லை...
இவர் எந்த ஊர்? என்ன பெயர்??
புதூரைச்சார்ந்த,கான்பகதூர் .ச.அ. நயினா முஹமது ராவுத்தர் அவர்களின் மகனாகிய. சண்டி கான்சாகிப் . ச.அ. ந.முஹமது ராவுத்தர் அவர்களே *********






7 comments:
சண்டி முஹமது ராவுத்தர் அவர்களை ப்ற்றி நினைவு கூர்ந்ததற்கு நண்றி
இவர்கள் மவுத் ஆன்வுடன் இவருடைய ஜனாஸா சந்தனப்பெட்டியில் வைத்து
அடக்கம் செய்யப்பட்டது..புதூர் வாசி
சமுதாய நலனில் அக்கறை கொண்டு தஙகள் பெரும் உழைப்பாலும்,பொருள்
உதவீயாலும் கல்வி நிருவனங்களை உருவாககிய மறைந்த சமுதாய நல ஆர்வலர்கள் மர்ஹும் கான்சாஹிப் சண்டி ச.அ.ந.முஹம்மது ராவுத்தர்,
வாஞ்ஜுர் பீர்ம்ஹம்மது கலிஃபா k.m. நைனாமுஹம்மது மற்றும் சான்றோர் பலர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது.
நேற்றய விதைகள் இன்றைய மரங்கள்
விதைத்தவனை உழைத்தவனை கிளைகள் மறக்கலாம்
ஆனால் வேர்கள் மறக்காது
மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டது
நம் சமுதாயத்திற்க்காக பாடுபட்டவர்களை
கண்ணியப்படுத்துங்கள.அதனால் உஙகள் கண்ணியம் குறைந்து விடாது.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளருஙகள்.
உங்கள் பிள்ளை தானே வளரும்.
இந்த இணயதளம் ஆக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளருட்டும் உஙகள் பணி.
சிந்தா அப்துல்லாஹ்
சவூதி அரேபியா
21-04-2009
சமுதாய நலனில் அக்கறை கொண்டு தஙகள் பெரும் உழைப்பாலும்,பொருள்
உதவீயாலும் கல்வி நிருவனங்களை உருவாககிய மறைந்த சமுதாய நல ஆர்வலர்கள் மர்ஹும் கான்சாஹிப் சண்டி ச.அ.ந.முஹம்மது ராவுத்தர்,
வாஞ்ஜுர் பீர்ம்ஹம்மது கலிஃபா k.m. நைனாமுஹம்மது மற்றும் சான்றோர் பலர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது.
நேற்றய விதைகள் இன்றைய மரங்கள்
விதைத்தவனை உழைத்தவனை கிளைகள் மறக்கலாம்
ஆனால் வேர்கள் மறக்காது
மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டது
நம் சமுதாயத்திற்க்காக பாடுபட்டவர்களை
கண்ணியப்படுத்துங்கள.அதனால் உஙகள் கண்ணியம் குறைந்து விடாது.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளருஙகள்.
உங்கள் பிள்ளை தானே வளரும்.
இந்த இணயதளம் ஆக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளருட்டும் உஙகள் பணி.
சிந்தா அப்துல்லாஹ்
சவூதி அரேபியா
21-04-2009
really its a nice job
ச்ண்டி கான்சாஹிப் ச.அ.ந.முஹம்மது ராவுத்தர் அவர்கள்
பிறந்த நாள் 17.03.1888
இறந்த நாள் 27.11.1966
பதிவு
சிந்தா அப்துல்லாஹ்
சவுதி அரேபியா
21.04.2009
சண்டி கான்சாகிப் . ச.அ. ந.முஹமது ராவுத்தர்.
A great Soul.
We expect more details about this kid of people who spent their time and enargy for our place
Thanks for publish
Abuthahir
Post a Comment