ஏழாம் வெளிச்சம்-அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்:
>> Friday, December 18, 2009
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" - அறிஞர் அண்ணாதுரை..
இளையான்குடியில் பிறந்து, சட்டத்தின் இருட்டறையில் புகுந்து, விளக்கு(வெளிச்சம்) ஏந்தி
சட்டத்திற்கும், இளையான்குடிக்கும் பெருமை சேர்த்தவர் எவரோ? அவரே அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்..
இளையான்குடியில், ஆங்கிலேயர் காலத்திலேயே கிராம அதிகாரியாக (ஹெட் மேன்) நியமனம் பெற்று, வளையாத 'ஹெட்மன்' என்று பெயரெடுத்த ஜனாப் கு.சிக்கந்தர் பாட்சா அம்பலம், ஜனாபா சபுர்ஹான் பீவீ ,தம்பதிகளின் மூன்று புதல்வர்களில் 'இளையவராக'
15/07/1930ல் பிறந்தார்.
இளம் வயதில், எல்லோரும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த, ரஹ்மானியா உயர் ஆரம்பப்பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி முடித்து, பின் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி போர்ட் உயர்நிலைப்பள்ளியில் பயின்று விட்டு, மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் B.A. பட்டப்படிப்பை கற்று, பட்டதாரியாகி, சட்டம் பயில வேண்டி, மெட்றாஸ் சட்டக்கல்லூரியில் B.L. பட்டம் வாங்கி 1956ல் வழக்கறிஞர் ஆகிறார்.
மதுரையில் புகழ் பெற்ற, மூத்த வழக்கறிஞர் திரு M.S..கிருஷ்னஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் Apperentice ஆக சேர்ந்து பணியாற்றிவிட்டு, பின் 19/12/57 முதல் 1961 வரை மதுரையில் வக்கீலாக பயிற்ச்சியில் இருந்தார்.
1961 லேயே ,சென்னை வந்து மதிப்பிற்குரிய ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்களிடம் ஜூனியராக தன் திறமையைகாட்டி வந்துள்ளார்கள்.பின் மதிப்பிற்குரிய மேதகு ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்கள் நீதியரசராக வீற்றிருந்து 'நீதி' யை நிலை நிறுத்தி வந்துள்ளார்கள் .இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்தார்கள்
அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்,உயர் நீதி மன்றத்திலும், சார்பு நிலை நீதி மன்றத்திலும். ட்ரிப்யூனலிலும், வழக்காடி நல்லதொரு மூத்த வழக்கறிஞர் என்ற பெயரை நிலை நாட்டினார்கள்..
இவருடைய திறமையின் பயனாக, 1989ல், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி அரசாங்கத்தின், அரசு சார்பு Pleader ஆகவும், பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆகவும் சென்னை உயர் நீதி மன்றத்தில், 4 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார்கள்
பாண்டிச்சேரியின், Anglo French Textiles Ltd கம்பெனியின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார்.
02/04/2002ல். பாண்டிச்சேரி அரசின் மனித உரிமைக்கமிட்டியின் மெம்பராக, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் நியமனம் செய்கிறார்கள். பாண்டிச்சேரி மனித உரிமை கமிட்டியில் .மேதகு நீதியரசர் P. தங்கமனி அவர்கள் (Madras High Court) சேர்மனாகவும், ஜனாப் K.S.அஹமது அவர்களும் ,Sister சேவியர் மேரி அவர்களும் அங்கம் வகித்தனர் .
இவருடைய குடும்பத்தை பற்றி: இவர்களது துனைவியார் பெயர் ஜனாபா. சபியாள் பேகம், இத் தம்பதிகளுக்கு, இரண்டு பெண் மக்களும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர்
இவரது மூத்த மகனார், Dr. உஸ்மான் அலி அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார்.. தற்சமயம் சென்னையை அடுத்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் Senior Civil Surgeon ஆகப்பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இளைய மகனார், ஜனாப் அப்துல் ஜலீல் அவர்கள், அரப் அமீரகத்தில் வேலை செய்துவிட்டு ,சென்னை வந்து Textile தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
Advocate K.S.Ahamed.B.A.B.L

இவரைபற்றி பொதுவாக:
அம்பலமா? என்பதை நம்பலாமா? என்பதற்கேற்ப, யாரையும் இவர் சீண்டியதும் ,தீண்டியதும் இல்லை..
சினமும், சீறுவதும் நீதி மன்றத்தில் வழக்காடும் போதுதான்..
மனித நேயம், பிறர் கேட்காமல் செய்யும் உதவிகள், பல ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச்செய்தல்..
இவரிடம் "Case" கட்டுகள் அதிகமாக இருந்தாலும், "Cash" கட்டுகள் அதிகம் பெற்றதில்லை..
எந்தவொரு வழக்கும், தன் மனதுக்கு நியாயமாக பட்டால் மட்டுமே, வாதாடுவார்கள்..
ALIM Engineering College க்கு ஸ்தாபக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்கள்..
இவரிடம் ஜூனியராக பணியாற்றியவர்கள், இன்று உயர் நீதி மன்றத்தில் நல்ல புகழோடு வாதிடுகிறார்கள்..
இவர்கள் நிச்சயமாக "நீதிபதி" ஆகியிருக்க வேண்டும்..ஆனால்?!
2007 ம் வருடம் நவம்பர் மாதம் 21ந்தேதி சென்னையில் வபாத் ஆனார்கள்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
தகவல்கள் வழங்கியவர் K.S.A. அப்துல் ஜலீல் அவர்கள்..
நிர்வாகம்
Home Read more...




























